மெழுகு சிலை போல் போஸ் கொடுத்த நடிகை தமன்னா.. ட்ரெண்டிங் புகைப்படங்கள்
நடிகை தமன்னா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் ஆக்ஷன்.
இப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு பின் தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா, தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் கதாநாயகியாக தமன்னா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மெழுகு சிலை போல் தமன்னா
நடிகை தமன்னா ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினியுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். தமன்னாவின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது மெழுகு சிலை போல் போஸ் கொடுத்த தமன்னா எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..

