நடிகை த்ரிஷாவை பள்ளி உடையில் பார்த்துள்ளீர்களா.. வெளிவந்த த்ரிஷாவின் ஸ்கூல் போட்டோ
த்ரிஷா
ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் ஐடென்டிட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
மேலும் பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இன்றைய தமிழ் சினிமாவில் பிஸியான முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, 40 வயதுக்கும் மேலாகியுள்ள மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவின் ஸ்கூல் போட்டோ
நாம் பலரும் பார்த்திராத திரையுலக பிரபலங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில், நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பள்ளி உடையில் தனது தோழிகளுடன் நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..