40 தொட்ட இளவரசி நடிகை த்ரிஷா- அவரது முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை த்ரிஷா
த்ரிஷா என்று கூறுவதை விட குந்தவை என கூறுவது இப்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பெயராக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி குந்தவையாக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
இன்று மே 4, நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள், 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா.
அதன்பிறகு அவரது பயணம் எல்லாமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அத்துப்படி. சரி 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு, புதுப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் போன்ற விவரங்களை காண்போம்.
நடிகையின் சொத்து மதிப்பு
பொன்னியின் செல்வன் படத்தில் அழகான இளவரசி குந்தவையாக நடிக்க அவர் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெற்றாராம். அதேபோல் விஜய்யுடன் ஜோடியாக லியோ படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்.
மாதம் ரூ. 60 லட்சம், ஆண்டுக்கு ரூ. 9 கோடி வரை த்ரிஷா விளம்பரங்கள், படங்கள் மூலம் சம்பாதித்து வருவதாக தெரிவிக்கின்றன. சென்னையில் ரூ. 6 கோடி மதிப்பிலான சொந்த வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு, ரியல் எஸ்டேட் மூலமும் சம்பாதிக்கிறாராம்.
ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், ரூ. 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார்கள் திரிஷாவிடம் உள்ளன.
மொத்தமாக நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ. 70 முதல் ரூ. 80 கோடி வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு வாசல் தொடரில் இருந்து சஞ்சீவை விலகியதற்கு விஜய்யின் அப்பா காரணமா?- வெளிவந்த விவரம்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
