கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சீரியல் நடிகை.. ஷாக்கிங் தகவல்
வைபவி உபாத்யாய்
கடந்த 2004ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராபாய் எனும் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாய்.
இந்த சீரியலுக்கு பின் தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க துவங்கினார். பின் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராகவும் மாறினார்.
நடிகை வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஷாக்கிங் தகவல்
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் வைபவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நடிகை வைபவியின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
