அஞ்சலியை தொடர்ந்து வாணி போஜனிடமும் இப்படி செய்யும் நடிகர் ஜெய்.. சர்ச்சையில் சிக்கிய நடிகை
சர்ச்சையில் சிக்கிய வாணி போஜன்
சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் வாணி போஜன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சிறந்த படங்கள் மூலம் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
அது என்னவென்றால், வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றுள்ளாராம். அப்போது வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். ஒரு முறை அல்ல இரு முறை அல்ல நான்கு முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதெல்லாம் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்த இயக்குனர் கதை சொல்லாமல் வந்துவிடுகிறாராம்.
அஞ்சலியை தொடர்ந்து வாணி போஜனிடம் ஜெய்
இதே போல் தான் நடிகர் ஜெய் சில வருடங்களுக்கு முன் நடிகை அஞ்சலிடம் நடந்துகொண்டார். படப்பிடிப்பில் இருக்கும் பொழுது, இந்த காட்சியில் அஞ்சலி இப்படி நடிக்க மாட்டார், அப்படி நடிக்க மாட்டார் என்று சொல்லி சொல்லியே அஞ்சலியின் மார்க்கெட் சரிந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதே போல் தற்போது வாணி போஜன் கதை கேட்கும் பொழுது ஜெய் பக்கத்தில் இருந்தால், அது வாணி போஜனின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு ஒரு மைனஸ் தான் என்று பேசப்படுகிறது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.