சீரியல் நடிகை என நடிகை வாணி போஜனை நிராகரித்த முன்னணி நடிகர்கள்!
வாணி போஜன்
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை வாணி போஜன்.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த வாணி போஜனுக்கு அதிக திரைப்படங்களின் வாய்ப்பு வந்தன. மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தில் வாணி போஜன் நடித்திருந்தாலும் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டன.
சீரியல் நடிகை
இதற்கிடையே அவர் நடிப்பில் தமிழ் ராக்ர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இதனை விளம்பரப்படுத்தும் வகையில் நடிகை வாணி போஜன் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் பட வாய்ப்புக்காக தான் மிகவும் கஷ்டப்பட்டேன், பல ஆடிஷனுக்கு சென்றேன், அப்போது சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் பல நடிகர்கள் சீரியல் நடிகையா? என்று என்னை தூக்கி எறிந்தனர் என பேசியிருக்கிறார்.
விஜய் டிவியின் அடையாளம் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
