தனது அம்மாவின் பிறந்தநாள், எமோஷ்னல் பதிவு போட்ட வனிதா விஜயகுமார்- இதோ அவரது பதிவு
வனிதா விஜயகுமார்
தனது சினிமா பயணத்தை எப்போதோ தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார் இப்போது தான் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார்.
நாயகியாக நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு சில படங்களிலேயே அவர் சினிமா பக்கம் வருவதை நிறுத்திவிட்டார். திருமணம், குழந்தைகள், விவாகரத்து என அவரது சொந்த வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது.
ஒருகட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பரபரப்பாக பணிபுரிய தொடங்கி இருக்கிறார்.
சமையல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சிக்கு நடுவர் என தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இப்போது சொந்த தொழில்கள் சில தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

எமோஷ்னல் பதிவு
தற்போது நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் உங்கள் அம்மா உங்களுடன் தான் இருப்பார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியல் அருண் அம்மா, அப்பா யார் தெரியுமா?- அவர்களும் நடிகர்கள் தானா 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    