விவாகரத்து செய்து தனியாக வாழும் நடிகை வரலட்சுமியின் அம்மா என்ன செய்கிறார் தெரியுமா?
வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நாயகிகளில் ஒருவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தில் தொடங்கிய அவரது பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இடையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே வேறொருவர் போல் இருந்தார்.
சமீபத்தில் அவர் மிகவும் ஒல்லியான வீடியோவை வெளியிட அதைப்பார்த்து ரசிகர்கள் அட இது வரலட்சுமியா என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.
நடிகையின் அம்மா
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியும், வரலட்சுமியின் அம்மாவுமான சாயா தேவி இப்போது என்ன செய்கிறார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, சரத்குமாருடன் விவாகரத்து பெற்று பிரியும் போது வரலட்சுமி சிறு குழந்தையாக இருந்தார். அவரிடம் அப்பாவா அல்லது அம்மாவா என கேட்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விவாகரத்து செய்த பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டும், நானும் பிரச்சனைகளை சந்தித்தேன். எனவே தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் பல பெண்கலுக்கு உதவி வருவதாக சாயா தேவி கூறியுள்ளார்.
அந்த அறக்கட்டளையை தனது மகள் வரலட்சுமி தான் துவங்கியதாகவும் சாயா தேவி தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலை அடுத்து டாப் TRP ரேட்டிங் பெற்றுள்ள யாரும் எதிர்ப்பார்க்காத தொடர்- ரசிகர்கள் ஆர்வம்