அட அஜித்தின் சிட்டிசன் பட நடிகை வசுந்தராவா இது?... அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ
வசுந்தரா தாஸ்
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு கமல் நடித்த ஹேராம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் வசுந்தரா தாஸ்.
அவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அஜித்துடன் இவர் நடித்த சிட்டிசன் படம் வசுந்தரா திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.
தமிழை தாண்டி ஹிந்தி, மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். அவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

லேட்டஸ்ட்
அஜித்துடன் இவர் நடித்த சிட்டிசன் படம் வசுந்தரா திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.
ஆனால் சிட்டிசன் படத்தில் வசுந்தராவிற்கு முன் நடிக்க இருந்தது சமீரா ரெட்டி தானாம், ஆனால் மொழி தகராறு பிரச்சனையால் நடிக்கவில்லை. இவர் இப்படத்தில் இடம்பெற்ற பூக்காரா பாடலை வந்தவரை அப்படியே நடிக்க கேட்டுள்ளனர்.

நடனம் ஆட தெரியாத இவர் மிகவும் கஷ்டப்பட்டு சிட்டிசன் படத்தில் நடனம் ஆடியுள்ளார். சிட்டிசனை தாண்டி முதல்வன் படத்தில் ஷகலகா பேபி, விஜய்யின் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி, ரிதம் படத்தில் பத்திக்கிச்சு என ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
2007ம் ஆண்டிற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகியவர் டிரம்ஜாம் என்கிற மியூசிக் பேண்ட் நடத்திவரும் வசுந்தரா நிறைய இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோ வெளியாக ரசிகர்கள் சிட்டிசன் வசுந்தரா வா என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.
