பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை ஆனால் தற்போது பல கோடிக்கு அதிபதி.. யார் இந்த நடிகை?
சில சினிமா நடிகைகள் டாக்டர் படிப்பு படித்து விட்டு சினிமா பக்கம் வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அதிகம் படிக்காவிட்டாலும், தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு நடிகை அதிகம் படிக்கவில்லை என்றாலும் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
யார்?
அவர் வேறு யாருமில்லை, நடிகை கத்ரீனா கைப் தான். சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் கடந்த 2021ம் ஆண்டு நடிகர் விக்கி கவுஷலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் 10 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை, ஆனால் இப்போது ஒரு படத்திற்கு ரூ.15 முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.