கார்த்தியின் படத்தில் முதலில் குழந்தை நட்சத்திரம், இப்போ அவருக்கே ஜோடி.. யார் தெரியுமா?
கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று படம் என தனது திரைப்பயணத்தில் நிறைய வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படத்தை முடித்த கையோடு சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
யார் தெரியுமா?
கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தற்போது அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம், இந்த படத்தில் ஒரு காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் கீர்த்தி ஷெட்டி. தற்போது இவர் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.