விபத்தில் தோழியை கொன்றபிறகு எப்படி இருக்கிறீர்கள்... யாஷிகாவை கேட்ட ரசிகர் அவரது பதில்
துருவங்கள் 16, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
பிக்பாஸ் என்ட்ரி
அப்படங்களுக்கு பிறகு நேராக பிக்பாஸ் 2வது சீசனில் பங்குபெற்றார். இதில் நன்றாக போட்டிபோட்டு வந்த யாஷிகா திடீரென காதல் டிராக் மாற கொஞ்சம் விளையாட்டில் தடுமாறினார். 98 நாட்கள் வீட்டில் இருந்து யாஷிகா 5 லட்சத்துடன் வெளியேறினார்.
விபத்தில் சிக்கிய யாஷிகா
இவர் 2021ம் ஆண்டு ஜுலை மாதம் பயங்கர விபத்தில் சிக்கினார். அதில் யாஷிகாவிற்கு உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்பட, 6 மாதங்களுக்கு மேல் நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்.
இந்த விபத்தில் யாஷிகாவுடன் இருந்த அவரது தோழி பவானி வல்லிசெட்டி உயிரிழந்தார். ரசிகரின் கேள்வி யாஷிகா அதன்பிறகு சமூக வலைதளங்களில் அதிகமாக வராமல் இருந்தார்.
டுவிட்டரில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய யாஷிகாவிடம் ஒரு ரசிகர், குடித்துவிட்டு கார் ஓட்டிய கேஸ் என்ன ஆனது, விபத்தில் தோழியை கொன்ற பிறகு எப்படி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு யாஷிகா, நான் குடிக்கவில்லை, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது எனக்கு சுயநினைவு இல்லை, மருத்துவமனை ரிப்போர்ட்டில் நான் குடித்ததாக இல்லை. ஒருவரை பற்றி பேசும்முன் தெளிவாக எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வதந்தியை பரப்ப வேண்டாம் என பதில் கூறியுள்ளார்.
சீயான் 61 படத்தின் டைட்டில் இது தானா ! செம மாஸ்ஸாக இருக்குமே..