சீயான் 61 படத்தின் டைட்டில் இது தானா ! செம மாஸ்ஸாக இருக்குமே..
தொடர்ந்து வெளியாகும் அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், கமல் என டாப் நடிகர்களின் திரைப்படங்கள் குறித்த அப்டேட் தொடர்ந்து வந்தபடி உள்ளன.
அதன்படி நேற்று கமலின் விக்ரம் பட போஸ்டருடன் ரெட் ஜெயண்ட் அப்படத்தை வெளியிடுவதாக மாஸ் போஸ்டருடன் அறிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரைலர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சீயான் 61
மேலும் தற்போது சீயான் விக்ரம் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
அப்படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படமாக இருக்கும் என்றும் பாரம்பரிய Body - Buliding குறித்த திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல் பரவின.
அதுமட்டுமின்றி அப்படத்தின் டைட்டில் 'மைதானம்' என இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விக்ரம் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் கூறபடுகிறது.
தனது மகனின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் பிரபலங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி- செம அழகு