மனைவியை விட அஜித்துக்கு தான்.. குட் பேட் அக்லி இயக்குநர் எமோஷ்னல்
ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் ஆதிக் கூட்டணி அமைத்த படம் குட் பேட் அக்லி.
இதுவரை எந்த ஒரு அஜித் திரைப்படத்திற்கும் கிடைக்காத ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எமோஷ்னல்
இந்நிலையில், அஜித் குமார் குறித்து ஆதிக் மேடையில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " நான் இன்று உங்கள் முன்பு நிற்பதற்கு முக்கிய காரணம் அஜித் சார் தான்.
அவருக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விட அஜித் சாருக்கு ஐ லவ் யூ சொன்னது தான் அதிகம்.
என் மனைவியை விட உங்களை தான் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து என் வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்" என்று தெரிவித்துள்ளார்.