ஏகே 64 அப்டேட்.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய சுவாரஸ்ய தகவல்
ஏகே 64
குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம்தான் ஏகே 64.
ஆனால், இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும் ஆதிக், படம் குறித்து பேசி வருகிறார்.

இதில் தொடர்ந்து அவர் கூறுவது, வருகிற பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என தெரிவிக்கிறார். ஆனால், இதுவரை ஏகே 64 படத்திற்காக அறிவிப்பு வெளிவராதது, அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
எப்படிப்பட்ட படமாக இருக்கும்
இந்த நிலையில், தற்போது ஏகே 64 எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது குறித்து ஆதிக் பேசியுள்ளார்.

இதில், பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் ஏராளமான சர்ப்ரைஸ் உள்ளது. ஏகே 64 கண்டிப்பாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படமாக இருக்கும் என ஆதிக் தெரிவித்திருக்கிறார்.