அஜித்தின் டேர் டெவில் படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புதிய அப்டேட்...

By Yathrika Aug 10, 2026 11:06 AM GMT
Report

டேர் டெவில்

அப்பாடா ஒருவழியாக நடிகர் அஜித் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என AK ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு தனது கனவை நோக்கி அதாவது கார் ரேஸிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்து போட்டியிடும் போட்டிகளிலும் அஜித்தின் அணி மிகப்பெரிய வெற்றியை கண்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அஜித் தனது 64வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். குட் பேட் அக்லி பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் அடுத்த படம் நடிக்கப்போகிறார் அஜித்.

அஜித்தின் டேர் டெவில் படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புதிய அப்டேட்... | Adhik Ravichandran About Ajith Dare Devil

புதிய அப்டேட்

அஜித்தின் 64வது படத்திற்கு டேர் டெவில் என பெயரிடப்பட்டுள்ளது, அதோடு இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்குகிறார் ஷாலினி அஜித்.

இப்படம் குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, குட் பேட் அக்லி போல இன்னொரு படம் எடுக்க முடியாது. டேர் டெவில் முழுக்க முழுக்க குடும்பங்கள், குழந்தைகள் என எல்லோருக்குமான கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். அதேபோல் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் வெங்கடேஷை டேர் டெவிலில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

அஜித்தின் டேர் டெவில் படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புதிய அப்டேட்... | Adhik Ravichandran About Ajith Dare Devil

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US