அஜித்தின் அர்ப்பணிப்பு.. வியந்து பதிவிட்ட குட் பேட் அக்லி இயக்குனர்
அஜித்தின் விடாமுயற்சி படம் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
வியந்த இயக்குனர்
தற்போது முதற்கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்று இருக்கிறது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அர்ப்பணிப்பு பற்றி வியந்து பதிவிட்டு இருக்கிறார்.
"உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்ற பார்த்து வியந்துவிட்டேன். எப்போதும் நன்றியுடன் இருப்பேன். லவ் யூ சார்" என ஆதிக் பதிவிட்டு இருக்கிறார்.
#GoodBadUgly Amazed by your dedication & involvement ❤️❤️???????? always grateful sir ❤️?????? Love you my sir❤️❤️❤️❤️?????????? pic.twitter.com/0VolG2rVPS
— Adhik Ravichandran (@Adhikravi) June 8, 2024