குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். இதை தொடர்ந்து சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கினார். இப்படத்திற்கு பின் 5 ஆண்டுகள் எந்த திரைப்படத்தையும் ஆதிக் இயக்கவில்லை.
இதன்பின் பகீரா படம் வெளிவந்தது. இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், அதன்பின் வெளிவந்த மார்க் ஆண்டனி மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார் ஆதிக்.
GBU
மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் இணைந்து திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகர்கவும், மறுபக்கம் இயக்குநராகவும் இப்படத்தை இயக்கினார்.
த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர் கடந்த 10ம் தேதி வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வெற்றியை கொண்டாடிய ஆதிக்
இந்த நிலையில், GBU படத்தின் மாபெரும் வெற்றியை தனது இயக்குநர் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..



Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri
