AK 64 அப்டேட் எப்போது.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய செம மாஸ் தகவல்
AK 64
அஜித் ரசிகர்கள் அனைவரும் AK 64 படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்றுதான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். அஜித் தனது கார் ரேஸிங்கை முடித்து வந்தவுடன் படம் குறித்து அப்டேட் வெளிவரும் என தகவல் கூறப்பட்டது.
அப்டேட்
இந்த நிலையில், விருது விழா ஒன்றில் AK 64 படத்தின் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஆதிக். அதாவது இப்படம் குறித்த அப்டேட் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரும் என அவரே கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.