குட் பேட் அக்லி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த பட நடிகர் இவர்தானா?.. மாஸ் தெறிக்கும் அப்டேட்
குட் பேட் அக்லி
கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது அஜித்தின் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படம் இந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்று. இப்படத்தின் மூலம் வெற்றிப் பட இயக்குனர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இப்பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குவார் என கூறப்படுகிறது.
டாப் ஹீரோ
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் மாஸ் ஹீரோவுடன் இணையப் போவதாக இன்னொரு தகவல் வந்துள்ளது.
அதாவது தெலுங்கு சினிமாவின் மாஸ் நாயகனாக பாலகிருஷ்ணாவை வைத்து ஆதிக் படம் இயக்க பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாலைய்யாவுடன் ஆதிக் இணைந்தால் கண்டிப்பாக அப்படம் மாஸ் படமாக இருக்கும் என்கின்றனர்.

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
