AK 64 படம் இப்படித்தான் இருக்கும்.. முதல் முறையாக கூறிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித் - ஆதிக்
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் - ஆதிக் கூட்டணி இணைந்துள்ளது. ஆம், அஜித்தின் 64வது திரைப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார். இதை அவரே வெளிப்படையாக கூறிவிட்டார்.
AK 64
இந்த நிலையில், சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் AK 64 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "குட் பேட் அக்லி ரசிகர்களுக்காக பண்ண திரைப்படம், AK 64 கண்டிப்பாக என்ஜாய் பண்ணக்கூடிய Entertaining படமாக இருக்கும்" என ஆதிக் கூறியுள்ளார். AK 64 படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியது, தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
