AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போ? இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி
AK 64
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இந்த ஆண்டு வெளிவந்த படம் குட் பேட் அக்லி. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணி AK 64 படத்திற்காக இணைந்துள்ளனர். ஆனால், இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி
இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் இயக்குநர் ஆதிக். இதில், "கிட்டதட்ட படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவுக்கு வந்துவிட்டது. பிப்ரவரி மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பம்" என கூறியுள்ளார்.
மேலும், இது தனக்கு ஸ்பெஷல் படம் என்றும், GBU படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் சார் கொடுத்துள்ள இந்த படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்கிற பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சினிமாவை தவிர்த்து அஜித் சார் இன்ஸ்பிரேஷனாக தான் பார்க்கிறோம். சார் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ அதே அளவிற்கு அவருடைய பேஷனையும் நேசிக்கிறார். இந்தியாவுக்கு பெருமை தேடி தருகிறார்" என கூறியுள்ளார்.