பிரபாஸ், கிரித்தி சனொன், சைப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருந்த ஆதிபுருஷ் படம் கடந்த ஜூன் 16ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.
ராமாயண கதையை படமாக்கி இருக்கிறார்கள் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முழு படத்தையும் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் தான் அடைந்தனர். படத்தில் கதாபாத்திரங்களின் லுக் திருப்திகரமாக இல்லை, VFX கூட சொல்லும் அளவுக்கு இல்லை, கார்ட்டூன் போல இருக்கிறது என கடும் விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் ஒரு சில வசனங்களும் சர்ச்சை ஏற்படுத்தியதால் அதை ரிலீசுக்கு பிறகு படக்குழு நீக்கியது.
நஷ்டம்
சுமார் 350 கோடி ருபாய் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து இருந்தாலும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய தொகை நஷ்டம் ஆகி இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் தான்.
தயாரிப்பாளருக்கு சுமார் 250 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பாகுபலி படத்திற்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பிரபாஸின் தோல்வி படங்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி இந்த படம் தான்.
அடுத்து அவர் நடிக்கும் சலார் படம் தான் கெரியரை காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
உயிரை பணயம் வைத்த விஜய்.. வெளிவந்த சண்டைக்காட்சி வீடியோ

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
