விஜய் - அஜித்தால் பின்வாங்கிய பகுபாலி நடிகர் பிரபாஸ்.. தீடீர் அறிவிப்பு
ஆதிபுருஷ்
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ரனாவத் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ளார். மேலும் வில்லன் ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார்.
ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து கடும் விமர்சனங்களை சந்தித்தது. மோசமான Vfx என்றும், இதற்காகவா ரூ. 500 கோடி செலவு செய்தீர்கள் என்றும் ஆதிரபுருஷ் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
தள்ளிப்போன ரிலீஸ்
இந்நிலையில், வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த ஆதிபுருஷ் திரைப்படம் சற்று தள்ளிப்போய் அடுத்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் Vfx-ஐ கொஞ்சம் சரி செய்ய வேண்டும் என்பதால் தான் இந்த முடிவு என்று கூறப்படுகிறது.
Vfx-ஐ சரிசெய்ய ரூ. 500 கோடி பட்ஜெட்டை தாண்டி இன்னும் ரூ. 100 கோடியை செலவு செய்யவுள்ளார்களாம். Vfx-ஐ சரிசெய்ய வேண்டும் என்று தான் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது என்று கூறினாலும், அதற்க்கு வேறொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
காரணம் விஜய் - அஜித் தானா
அது என்னவென்றால், ஆதிபுருஷ் வெளியாகவிருந்த பொங்கல் அன்று விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு மாபெரும் நட்சத்திரங்கள் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதனால், ஆதிபுருஷ் திரைப்படத்தின் வசூல் கண்டிப்பாக மோசமான வகையில் அடிவாங்கும் என்று தெரிந்துகொண்டு தான் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளார்கள் என்று திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu
