சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )
கமல் ஹாசன்
சினிமாவிற்காக தனது வாழ்க்கையில் இருந்து இதுவரை 63 ஆண்டுகளை அர்ப்பணித்து இருக்கும் நபர் உலகநாயகன் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தில் செல்வம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து திரையில் உதித்த இந்த சூரியன், அஸ்தமனம் என்ற வாரத்தை அகற்றி இன்று வரை சினிமாவில் ஒளி கொடுத்து கொண்டிருக்கிறது.
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடன இயக்குனராகவும், மேக்கப் கலைஞராகவும் என பல பரிணாமங்களில் நம்மை வியக்கவைத்துள்ளார் கமல். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுமையான விஷயங்களை கொண்டு வந்து இந்திய சினிமாவையே, தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார். அப்படி கமல் ஹாசன் இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த புதுமையான விஷயங்கள் குறித்து தான் அவருடைய பிறந்தநாளான இன்று இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
கமல் அறிமுகம் செய்து வைத்த படைப்புகள்
Movie Magic Software - இந்திய சினிமாவிலேயே முதல் முதலில் இந்த Movie Magic Software தேவர் மகன் படத்திற்காக தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த Software-ரை பயன்படுத்தி தான் தேவர் மகன் படத்திற்கான திரைக்கதையை கமல் ஹாசன் உருவாக்கியுள்ளார்.
Avid Technology - இந்த Software பயன்படுத்தி இந்திய சினிமாவிலேயே முதல் நபராக டிஜிட்டலாக ஒரு படத்தை எடிட் செய்துள்ளார் கமல். அப்படம் தான் மகாநதி.
Dolby Stereo - 1995ஆம் ஆண்டு வெளிவந்த குருதிப்புனல் திரைப்படத்தில் தான் முதன் முதலில் Dolby Stereo எனும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார் கமல்.
Prosthetic Makeup - சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் படத்தில் தான், முதன் முதலில் Prosthetic Makeup பயன்படுத்தப்பட்டுள்ளது.
Motion Control Rig - இரட்டை வேடத்தில் கமல் ஹாசன் நடித்து அசத்திய ஆளவந்தான் திரைப்படத்தில் தான் முதன் முதலில் Motion Control Rig எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து தான் தத்துரூபமாக அப்படத்தை உருவாக்கியுள்ளார்.
Animation Sequences { In Real Time Movie } - ஆளவந்தான் திரைப்படத்தில் இடம்பெற்ற Animation Sequence காட்சி தான் இந்திய சினிமாவிலேயே முதன் முதலில் Real Timeல் பயன்படுத்தப்பட்டது.
Digital Camera { Red Epic Camera } - 2005ஆம் ஆண்டு வெளிவந்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் தான் முதன் முதலில் Red Epic எனும் Digital Camera பயன்படுத்தப்பட்டது.
Auro 3D 7.1 Sound Technology - கமல் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் தான், இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக Auro 3D 7.1 Sound தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி பல படைப்புகளை திரையுலகிற்கு கொடுத்துள்ள கமல் ஹாசனின் 68 பிறந்தநாளுக்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்.. கவிஞர் வாலி கூறியது போல், 200 ஆண்டுகள் ஆனாலும் கமல் வாழ்வார்.. அவர் படைப்புகள் வாழும்.. பிறந்தால் வாழ்த்துக்கள் கமல் சார்..
Big Fan Of Your Work
நண்பனோடு தோளோடு தோள் நின்ற கமல் ஹாசன்.. பல கோடி மக்கள் பார்த்திராத புகைப்படம்