வசூல் விவரம் எல்லாம் பொய்யா.. ஆதிபுருஷ் தயாரிப்பாளருக்கு மொத்தம் இத்தனை கோடி நஷ்டமா?
ஆதிபுருஷ்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையப்படுத்திய இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நேரத்திலேயே அதிகம் ட்ரோல்களில் சிக்கியது.
குறிப்பாக VFX வீடியோ கேம் போல இருக்கிறது என ட்ரோல் செய்தனர். அதன் பின் படக்குழு மீண்டும் பல்வேறு மாற்றங்களை செய்து ஜூன் 16ம் தேதி ரிலீஸ் செய்தது.

தயாரிப்பாளருக்கு இவ்வளவு நஷ்டமா?
படம் வெளியான முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளை படம் சந்தித்தது. வசனங்களுக்கு எதிர்ப்பு எழுந்ததால் அதை மாற்றினார்கள். இருப்பினும் பாக்ஸ் ஆபிசில் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.
10 நாட்களில் 450 கோடி வசூலித்துவிட்டது என படக்குழு அறிவிப்பு வெளியிட்டாலும், அது மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் குற்றம்சாட்டினார்கள். படம் தற்போது ஓடும் தியேட்டர்கலில் குறைந்த அளவே occupancy இருந்து வருகிறது.
ஆதிபுருஷ் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு சுமார் 50 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவாஜி படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இவரா?