சிவாஜி படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இவரா?
சிவாஜி
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் 2007ல் வந்து பெரிய ஹிட் ஆன படம் சிவாஜி. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது.
ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர். மேலும் வில்லன் ஆதிசேஷன் ரோலில் நடித்து சுமன் மிரட்டி இருப்பார்.

நடிக்க மறுத்த சத்யராஜ்
சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க முதலில் இயக்குனர் ஷங்கர் சத்யராஜை தான் அணுகி இருக்கிறார். ஆனால் அவர் வில்லன் ரோல் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
இதற்கு முன்பு ரஜினி உடன் பல்வேறு படங்களில் சத்தியராஜ் நடித்து இருக்கிறார். ஆனால் சிவாஜி படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பிய ரஜினிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
சத்யராஜ் முடியாது என சொன்ன பின் இறுதியாக நடிகர் சுமன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவரது நடிப்பு தற்போதும் ரசிகர்களால் பாராட்டப்படும் ஒன்றாக இருக்கிறது.

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் மகள் திருமணம்.. நன்றி மறந்துவிட்டாரா நடிகர் சூர்யா?
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri