இரண்டே நாளில் குறைந்த ஆதிபுருஷ் வசூல்.. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை
ஆதிபுருஷ்
பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், முதல் நாள் மட்டுமே ரூ. 140 கோடி வரை வசூல் செய்திருந்தது ஆதிபுருஷ்.
ஆனால், இரண்டாம் நாளில் அந்த வசூல் தலைகீழாக மாறியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் கண்டிப்பாக குறையும் என ஏற்கனவே செய்தி வெளிவந்தது.
இரண்டாம் நாள் வசூல்
இந்நிலையில், தற்போது இரண்டு நாட்கள் முடிவில் ஆதிபுருஷ் திரைப்படம் ரூ. 200 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் பொது இரண்டாம் நாளில் வெறும் ரூ. 60 கோடி மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளது என தெரிகிறது. இரண்டாம் நாளில் வசூல் குறைந்தாலும், இரண்டே நாளில் ரூ. 200 கோடி வசூல் என்பது பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு வசூலில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப்போகிறது என்று.
சங்கீதாவுடன் விவாகரத்து? நடிகையுடன் இரண்டாம் திருமணம்? அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த விஜய்

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி! IBC Tamilnadu
