இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சித்தார்த் மனைவி அதிதி ராவ் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Bhavya
in பிரபலங்கள்Report this article
அதிதி ராவ்
அதிதி ராவ் மலையாள திரைப்படமான பிரஜாபதி என்ற படத்தில் முன்னணி நடிகர் மம்முட்டியுடன் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
காற்று வெளியிடை என்ற படம் மூலமாக தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் அதிதி ராவ். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இன்று தனது 38 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அதிதி ராவ்வின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அதிதி பொதுவாக ஒரு படம் அல்லது வெப் சீரிஸ் நடிப்பதற்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 60 கோடி முதல் ரூ. 65 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.