நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ

Kathick
in பிரபலங்கள்Report this article
அதிதி ராவ் - சித்தார்த்
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என தகவல் வெளியான நிலையில், திருமணம் இல்லை எங்களுக்கு நிச்சயதார்த்தம் தான் நடந்துள்ளது என புகைப்படத்தை வெளியிட்டு, தங்களுடைய காதலை உறுதி செய்தனர்.
அதிதி ராவ்வின் முன்னாள் கணவர்
நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதை நாம் அறிவோம். ஆனால், அதிதி ராவ்வும் விவாகரத்து ஆனவர் என்பது பலருக்கும் தெரிந்து இருக்காது.
ஆம், கடந்த 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் அதிதி ராவ். பின் இருவரும் 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
தற்போது அதிதி ராவ்வின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ராமசபா குப்தா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். விரைவில் அதிதி ராவ்வும், நடிகர் சித்தார்த்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.