தொடர் முன்னணி நடிகர்களின் படத்தில் வாய்ப்பு! வாரிசு நடிகை குறித்த குற்றச்சாட்டுக்கு அதிதி ஷங்கரின் பதில்
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு அதிதி ஜோடியாக நடித்துள்ள விருமன் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது.
மேலும் இப்படத்தில் நடிகை அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர், தனது முதல் திரைப்படத்தில் பெரிய பெயரை அதிதி பெற்றுவிட்டார் எனவும் சொல்லி வருகிறார்கள்.
இதனையடுத்து அதிதி ஷங்கர் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் தற்போது ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு தொடர் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கிறது.
வாரிசு நடிகை
கோலிவுட்டில் நெப்போட்டிசம் உள்ளதற்கு அதிதி உதாரணம் என ரசிகர்கள் பலவிதமாக பேச துவங்கி விட்டனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை அதிதி ஷங்கர் பேசியிருப்பது ரசிகர்களின் கவனதை ஈர்த்துள்ளது.
“என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது, ரசிகர்கள் ஆதிரிக்க மாட்டார்கள். இந்த துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை மாறாக திறமை தான் கை கொடுக்கும்” என சொல்லியுள்ளார்.
நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
