தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா..
அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார்.
இந்த இரு திரைப்படங்களும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன்பின் தற்போது அதர்வா தம்பி ஹீரோவாக நடித்து, விஷ்ணு வர்தன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், முன்னணி ஹீரோவான சூர்யாவுடன் அதிதி ஷங்கர் கைகோர்க்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கங்குவா படத்திற்குப்பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்கிறார். மேலும் தற்போது இப்படத்தின் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
தம்பி சூர்யாவுடன் விருமன் படத்தில் நடித்திருந்த அதிதி தற்போது அண்ணன் சூர்யாவுடன் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
வசூலில் ஏமாற்றிய வாரிசு.. இப்படி செய்து தான் சாதனை படைக்க வேண்டுமா

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுடன் கைகோர்க்கும் இந்தியா - சீனாவின் BRI திட்டத்திற்கு நேரடி போட்டியாக TITR News Lankasri
