வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா
அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மாவீரன் படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அடுத்த படம்
அதன்படி, அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் தான் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தில் ஹீரோவாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆகாஷின் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறாராம்.

சேவியர் பிரிட்டோ தளபதி விஜய்யின் நெருங்கி உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

அச்சு அசல் அப்படியே ஏ.ஆர். ரஹ்மான் குரலில் பாடிய இசையமைப்பாளர்.. அசரவைத்த வீடியோ 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    