ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

Karthi Sivakarthikeyan Shankar Shanmugam Aditi Shankar Viruman
By Kathick 1 மாதம் முன்

அறிமுக நடிகை அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகளும், அறிமுக நடிகையுமானவர் அதிதி ஷங்கர். இவர் முத்தையா இயக்கத்தில் உருவாகி, வருகிற 12ஆம் தேதி வெளியாகவுள்ள விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, அதிதி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Aditi Shankar Salary Is Huge For Her Second Movie

விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார் அதிதி. இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இரண்டாவது படத்தில் இவ்வளவு சம்பளமா

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிதி ஷங்கரின் நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட திரையில் வெளியாகாத நிலையில், ஒரு அறிமுக நடிகைக்கு ரூ. 25 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது எப்படி எனும் விமர்சனம் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Aditi Shankar Salary Is Huge For Her Second Movie

எந்த ஒரு சினிமா பின்புலம் இல்லாமல் வரும் அறிமுக நடிகைகளுக்கு தரப்படாத சம்பளம், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் என்பதால் கொடுக்கப்பட்டுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த தகவல் பிரபல மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US