நடிப்பை விட்டுவிட்டு டாக்டர் வேலையை தொடங்கிய அதிதி ஷங்கர்! புகைப்படத்துடன் இதோ
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். அவர் விருமன் படத்தில் அறிமுகம் ஆன நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.
அடுத்து அவர் சூர்யா - சுதா கொங்கரா படத்தில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த பதில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த போது அதில் நஸ்ரியா தான் ஹீரோயின் என அறிவித்தனர்.
டாக்டர் வேலை
அதிதி ஷங்கர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பு முடித்தார்.
தற்போது அவர் டாக்டர் வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். டாக்டர் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
You May Like This Video