சிறுவனை அடித்த காலா பட நடிகர்.. சர்ச்சை கிளம்பியதால் மன்னிப்பு கேட்டு வீடியோ!
சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக்க நடித்தவர் நானா படேகர். பிரபல ஹிந்தி நடிகரான அவர் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரை அடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நானா படேகர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
Stars won't exist without fans....Fans should also avoid taking selfies with these egoistic stars...
— Tolly hub (@tolly_hub) November 15, 2023
What is this #Nanapatekar ji???#Prabhas never did like this in his entire career even after getting PAN Indian stardom with #Baahubali ....#Salaar pic.twitter.com/Mb6dIFkzzw
மன்னிப்பு
"நான் தற்போது நடித்து வரும் படத்தில் ஒரு காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு சிறுவன் எனது தொப்பியை விற்கிறீர்களா என கேட்பான், அவனை பிடித்து அடித்து சரியாக நடந்துகொள்ளும்படி கூற வேண்டும், அதன் பின் அவன் ஓடிவிடுவான்."
"முதல் ரிஹர்சல் முடிந்தபிறகு இரண்டாம் ரிஹர்சல் தொடங்குகும்படி இயக்குனர் கூறினார். அப்போது வந்த சிறுவனை நானும் முடித்துவிட்டேன். ஆனால் அதன் பின் தான் அது நடிக்க வந்தவர் இல்லை என்பது. அதனால் அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்க அழைத்தேன், ஆனால் நிற்காமல் ஓடிவிட்டார்."
"அந்த சிறுவனின் நண்பர் அந்த வீடியோவை எடுத்து இருக்கலாம். நான் யாருக்கும் போட்டோ எடுக்க நோ சொன்னதே இல்லை. இதில் தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். இது போல மீண்டும் செய்யமாட்டேன்" என நானா படேகர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
The video which is circulating on social media has been misinterpreted by many. What actually happened was a misunderstanding during the rehearsal of a shot from my upcoming film 'Journey'. pic.twitter.com/UwNClACGVG
— Nana Patekar (@nanagpatekar) November 15, 2023