நடிகை ராஷ்மிகாவை மிஞ்சிய சங்கர் மகள் அதிதி சங்கர்.. வெளிவந்த வீடியோவை பாருங்க
அதிதி சங்கர்
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் இயக்குனர் சங்கரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
விருமன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அதிதி சங்கருக்கு தற்போதே ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.
விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவை மிஞ்சிய அதிதி
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அதிதி சங்கர் அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.
ஆனால் தற்போது அதிதியின் தோழியும் பிரபல நடிகையுமான இந்திரஜா சங்கர் அதிதியுடன் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திரஜா சங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், புஷ்பா படத்தில் இடம்பெறும் 'சாமி சாமி' பாடலுக்கு அதிதி சங்கர் நடனமாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ராஷ்மிகாவையே மிஞ்சும் அளவிற்கு நடனம் ஆடுகிறாரே அதிதி என கூறி வருகிறார்கள்..
இதோ அந்த வீடியோ..

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
