மாரி தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்... ரசிகர்கள் வருத்தம்
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
சன் டிவி, விஜய் டிவி இரண்டு தொலைக்காட்சியும் தமிழக மக்கள் மனதில் ராஜ்ஜியம் நடத்துவரும் நிலையில் இவர்களும் களமிறங்கினார்கள்.
ஜீ தமிழ் ரசிகர்களிடம் ரீச் ஆக காரணம் சீரியல்கள் தான், அதிலும் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடர் தான் அதிகம் பார்வையாளர்களை கொண்டு வந்தது.
இப்போது ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் என கலக்கி வருகிறார்கள்.

கிளைமேக்ஸ்
தற்போது ஜீ தமிழில் சில சீரியல்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது. நினைத்தாலே இனிக்கும், மாரி போன்ற தொடர்கள் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. அதே வேகத்தில் பாரிஜாதம், திருமாங்கல்யம் போன்ற புதிய சீரியல்கள் களமிறங்கின.
தற்போது விரைவில் மனசெல்லாம் தொடர் முடிவுக்கு வரப்போகிறதாம், இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.