விஜய் படங்களுக்கு அடுத்து தமிழ்நாட்டில் விக்ரம் படம் மட்டுமே படைத்துள்ள சாதனை ! என்ன தெரியுமா?
பிரம்மாண்ட வசூல் சாதனை
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
தமிழ் திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று இருக்கிறது.
வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் சொதப்பி வந்த நிலையில் விக்ரம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று தமிழகத்தை தாண்டியும் வசூலை குவித்து வருகிறது.
இதனிடையே புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் விக்ரம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. மேலும் விக்ரம் படைத்துள்ள புதிய குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், இதுவரை ஒரு திரைப்படம் வெளியான 7 நாட்களிலே தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிவசூலை குவித்துள்ளது. 2 திரைப்படங்கள் மட்டுமே அதில் சர்கார், பிகில் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது 3-வதாக விக்ரம் திரைப்படமும் இணைந்துள்ளது.

தலையை வெட்டி விஜய் சேதுபதி நடந்து வருவாரா..விக்ரமில் இப்படி ஒரு காட்சி இருந்ததாம்