தளபதி 66 ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு கிடைத்த இன்னொரு ஜாக்பாட்
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்திற்கு பிறகு அதிக படவாய்ப்புகளை பெற்று வருகிறார். அவர் தற்போது தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.
கடந்த பல வருடங்களாகவே விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார். அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. இந்த படம் மட்டுமின்றி சில பாலிவுட் படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் அவர்.

இந்நிலையில் ராஷ்மிகாவுக்கு இன்னொரு பெரிய படம் கிடைத்து இருக்கிறது. பிரபாஸ் அடுத்து அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி உடன் கூட்டணி சேரும் படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபாஸ் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தபிறகு தான் இந்த படம் தொடங்கும் என தெரிகிறது.

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி பிரியங்கா.. போட்டோஷூட் புகைப்படங்கள்