குட் பேட் அக்லி முரட்டு சம்பவம்.. 500 கோடி வசூல் உறுதி! மீண்டும் இணையும் அஜித் - ஆதிக்?
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் ஆதிக் கூட்டணி அமைத்த படம் குட் பேட் அக்லி.
இப்படம் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை எந்த ஒரு அஜித் திரைப்படத்திற்கும் கிடைக்காத ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
மேலும் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் ரூ. 35 கோடிக்கும் மேல் வரும் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி கண்டிப்பாக இப்படத்தின் வசூல் ரூ. 500 கோடி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய வெற்றியை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார்.
மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் இவரே இயக்குவார் என தகவல் கூறுகின்றன. அதாவது குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகே 64 திரைப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். அஜித் ஒரு இயக்குனருடன் நெருங்கி பழகி துவங்கிவிட்டால் கண்டிப்பாக தொடர்ந்து அவருடன் படம் பண்ணுவார்.
சிறுத்தை சிவா, ஹெச். வினோத் ஆகிய இயக்குநர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அதன்படி, தற்போது இரண்டாவது முறையாக ஆதிக் உடன் அஜித் இணைவார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்று.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
