முதல் நாள் அகத்தியா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க
ஜீவாவின் அகத்தியா
தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. இவர் ராம், கற்றது தமிழ், கோ, நண்பன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பிளாக் திரைப்படமும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் அகத்தியா. இப்படத்தை பாடலாசிரியரும், இயக்குநருமான பா. விஜய் இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ராஷி கன்னா, அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அகத்தியா திரைப்படம் உலகளவில் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
