சினிமாவில் 7 வருடங்கள் கேப், காரணம் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- ஏன் தெரியுமா?
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வர தொடங்கி இருக்கிறார். இவரைப் பற்றி இந்த வருட ஆரம்பத்திவேயே ஒரு தகவல் வந்தது.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து
2004ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
தற்போது இந்த ஜோடி 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்துள்ளார்கள், காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் கண்டிப்பாக சேர்ந்துவிடுவார்கள், அவர்களது மகன்கள் எப்படியாவது சேர்த்து வைத்துவிடுவார்கள் என்ற நிறைய செய்திகள் வந்தது.
ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
ஐஸ்வர்யா கொடுத்த பேட்டி
விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ஆக்டீவாக சினிமாவில் பணியாற்ற தொடங்கியுள்ளார். விரைவில் ஒரு இசை ஆல்பம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா கொடுத்த ஒரு பேட்டியில், நான் சினிமாவில் இருந்து 7 வருடம் தள்ளி இருக்க காரணம் எனது மகன்கள் தான்.
அவர்களுடன் இருக்க வேண்டிய நேரம் என்பதால் சினிமாவில் இருந்து வலகி இருந்தேன் என கூறியுள்ளார்.
படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் Kgf 2 படத்தின் 3ம் பாகம் உருவாகிறதா?- வெளிவந்த அப்டேட்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
