சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆடிஷன் சென்ற பொன்னியின் செல்வன் பட நடிகை.. யார் தெரியுமா
சூரரை போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இவர் ஏற்று நடித்திருந்த கதாநாயகி பொம்மி கதாபாத்திரம் பலருடைய மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இவர் ஆடிஷன் சென்றாரா
இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பலரை ஆடிஷன் செய்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த ஆடிஷனில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியும் சென்றுள்ளார்.
ஆனால், ஐஸ்வர்யா லட்சுமி தேர்ந்தெடுக்கப்படவில்லை. கதாபாத்திரத்திற்கு அவர் செட் ஆகவில்லை என்றும், மதுரை வட்டார மொழி தனக்கு வரவில்லை என்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய் பட கதாநாயகி யார் தெரியுமா.. இதோ பாருங்க

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
