விவாகரத்து தொடர்ந்து "ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும்" - புகைப்படத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..
திடீர் பிரிவு
தமிழ் சினிமாவின் முக்கிய தம்பதிலாக இருந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
அவர்களின் பிரிவுக்கு பிறகு இருவரும் தங்களின் வேளைகளில் பிஸியாகி விட்டனர். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் சாங் ஒன்றை இயக்கியிருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யாவின் பதிவு
இந்நிலையில் தற்போதெல்லாம் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி ஒரு மாதம் இடைவெளிக்கு மீண்டும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளதாக தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

பாகுபலியை நெருங்கும் RRR! மூன்று நாளில் பிரம்மாண்ட வசூல் சாதனை