நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?- தலை சுற்றுதே
ஐஸ்வர்யா ராய்
உலக அழகிகள் எத்தனை பேர் வந்தாலும் தமிழ் சினிமா மக்கள் மனதில் என்றும் உலக அழகியாக நிலைத்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
மறைந்த நடிகர் விகேக் கூட ஒரு நிகழ்ச்சியில் எப்போதும் உலக அழகி என்றால் ஐஸ்வர்யா தான் என்று கூறியிருப்பார்.
இவர் 2007ம் ஆண்டு பாலிவுட்டின் டாப் நடிகர் அமிதாப் பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். அவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டாலும் அவரும் வருவார்.
பள்ளி கட்டணம்
தற்போது சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதனாவின் பள்ளி கட்டண விவரம் ஒன்று வலம் வருகிறது. மும்பையில் திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் ஐஸ்வர்யா மகள் ஆராத்யா 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
அங்கு எல்கேஜி முதல் ஏழாம் வகுப்பு வரை கட்டணம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்றும், அதேபோல் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டணம் நான்கு லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாவும், பிளஸ் ஒன் மற்றம் பிளஸ் டூக்கான பள்ளி கட்டணம் ஒன்பது லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.
இணையத்தில் வைரலாகும் இந்த தகவலை கண்ட மக்கள் தலையே சுற்றுதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.