50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என பட்டம் வென்று திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட் தான் இவருடைய அடையாளமாக இருந்தாலும் கூட தமிழ் படத்தில் தான் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார்.
மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தில் முதன்மை ரோலில் நடித்து நல்ல பாராட்டுகளை பெற்ற ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து.

இதன்பின், ஹிந்திக்கு சென்ற ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை எனும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இன்று நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு 50வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த சமயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 775 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டுமே ரூ. 112 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடியும், விளம்பர படங்களில் நடிக்க ரூ. 5 முதல் 6 கோடி ஐஸ்வர்யா ராய் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri