ஐஸ்வர்யா ராய்யிடம் அத்துமீறி நடந்த தமிழ் நடிகர்.. பளார் என கன்னத்தில் அறைந்த நடிகை
ஐஸ்வர்யா ராய்
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை தான் ஐஸ்வர்யா ராய். இவர் 1994ல் உலக அழகி பட்டத்தை வென்றார். இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் நினைவில் வருவது ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் முதன் முதலில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "இருவர்" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இந்தியில் பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
2007ம் ஆண்டு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதும் "நந்தினி" கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அத்துமீறி நடந்த தமிழ் நடிகர்
இந்நிலையில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் நடிகரை ஐஸ்வர்யா ராய் ஓங்கி அறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் ஒருவர் அவரிடம் ஒரு கட்சியில் அத்துமீற முயன்றதை உணர்ந்த ஐஸ்வர்யா அந்த நடிகரை அறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலின்படி அந்த நடிகர் யாரென பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து அப்பாஸ் நடித்திருப்பார். ஒருவேளை அது அவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுகின்றது. அதேசமயம் ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பார்.
ஒருவேளை நடிகர் பிரசாந்த் அறை வாங்கி இருப்பாரா என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
அப்பா பெயரை கெடுக்காதீங்க.. ஷாருக்கான் மகளின் எல்லை மீறிய கிளாமர் புகைப்படம்

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
