ஐஸ்வர்யா ராய்யை உடல் ரீதியாக தாக்கிய முன்னணி நடிகர்..!! நடிகைக்கு நடந்த கொடுமை
ஐஸ்வர்யா - சல்மான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலித்து அனைவரும் அறிந்த விஷயம் தான். 1999 முதல் 2002 வரை இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தன.
அதன்பின் இவர்களுடைய காதல் முறிவு பெரும் சர்ச்சையானது. 2002ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுடனான முறிவு குறித்து அறிவித்தார். சல்மான் கான் தன்னை சந்தேகித்ததாகவும், ஷாருக்கான் மற்றும் அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்களுடன் இணைந்து தவறாக பேசியதாகவும் ஐஸ்வர்யா ராய் கூறியிருந்தார்.
'உடல் ரீதியாக தாக்கினார்'
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சல்மான் கான் என்னை பலமுறை உடல் ரீதியாக தாக்கினார். அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் இல்லை. மறுபுறம் நான் எதுவும் நடக்காதது போல் வேலைக்கு சென்றேன்" என அவர் கூறினார். சல்மான் கான் தன்னை உடல் ரீதியாக தாக்கியது குறித்து ஐஸ்வர்யா ராய் பேசிய விஷயம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்து.
இதன்பின் 2007ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யா ராய்யின் திருமணம் குறித்து அவருடைய முன்னாள் காதலர் நடிகர் சல்மான் கானிடம் கேட்டுள்ளனர். அதற்கு சல்மான் கான் 'மகிழ்ச்சி' என கூறியுள்ளார்.