12 வயதில் தற்கொலை செய்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்.. துக்கத்துமேல் துக்கமாக விபத்தில் சிக்கி இறந்த இரண்டாவது அண்ணன்
ஐஸ்வர்யா ராஜேஷ்
திரையுலகில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டுமே 7 திரைப்படங்கள் வெளிவந்தன.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சிறு வயதில் இருந்தே மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மணிகண்டா எனும் ஒரு அண்ணன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இவர் நடன கலைஞர் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரர்களின் மறைவு
இவரை தவிர்த்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னும் இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மூத்த அண்ணன் தனது 12 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தை பெரும் அளவில் பாதித்துள்ளது.
இதன்பின் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டாவது அண்ணன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இரண்டாவது அண்ணன் மரணத்தின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் மானாட மயிலடா நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு இருந்தார். இந்த செய்தியை கேட்டவுடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது என்பதை மானாட மயிலடா நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/4cf2cb06-481e-4101-8b29-50a37b766a7a/25-678c9424d5460-sm.webp)
இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா? IBC Tamilnadu
![சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/2c18637b-e808-4ef1-aa68-8b25cdb026d3/25-678ca11e72854-sm.webp)
சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது என்ன? IBC Tamilnadu
![வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ;சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு..நாய் மலத்தைச் சாப்பிட வைத்த அவலம்!](https://cdn.ibcstack.com/article/76e20476-1149-42a9-8695-ab76d7f4d8f1/25-678cb58604400-sm.webp)